அறியாமையை அறுக்கும் அம்பிகையின் நாமம்
நகதீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணாநாம் இதற்கு முந்தைய நாமங்களில் அம்பிகையினுடைய கணுக்கால், அம்பிகையினுடைய பாதத்தினுடைய மேற்பரப்பு அவற்றையெல்லாம் பார்த்தோம். இப்போது அந்தப் பாதத்திலிருந்து வரக்கூடிய விரல்கள். அந்த விரல்களில் இருக்கக்கூடிய நகங்கள். இந்த நகங்கள் பிரகாசமாக இருக்கின்றன. ஒளி பொருந்தியதாக இருக்கின்றது. ஒளி பொருந்திய அந்த பாதத்தை அம்பிகையினுடைய பாதத்தை ஒரு பக்தன் அல்லது ஒரு சாதகன் வணங்கும்போது, இந்த வணங்குபவனுடைய தமோ குணத்தைநீக்கக் கூடியது அம்பிகையினுடைய நகங்கள். தமஸ் என்பது இங்கு நம்முடைய அஞ்ஞானம். விழிப்புணர்வற்ற ஜீவன, தமஸ் என்கிற அறியாமையில் மாட்டிக் கொண்டிருப்பது. இருள் மயமானது தமோகுணம்