மத்திய உள்துறை அமித்ஷா அறிவிப்பு?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2022 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து குடிமகனுக்கும் ஒரு வீட்டை வழங்கும் என்று நம்பிக்கை தமக்கு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
2015 ஆம் ஆண்டு அறிவித்த திட்டம் பிரதமர் மோடி அறிவித்த ‘அனைவருக்கும் வீடு திட்டம்’, அதாவது, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினர் (ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கும் மிகாமல்), குறைந்த வருவாய்ப் பிரிவினர் (ஆண்டு வருமானம் 3 லட்சம்-6 லட்சம் வரை) இத்திட்டத்தின் பயனாளிகள் ஆகலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் நடுத்தர வருமான பிரிவினர் – 1 (ஆண்டு வருமானம் 6 லட்சம் – 12 லட்சம் வரை), நடுத்தர வருமான பிரிவினர் – 2 (12 லட்சம் – 18 லட்சம் வரை) ஆகியோரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இத்திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 20 லட்சம் வீடுகள் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள ஷிலாஜில் பாலத்தை நாட்டுக்கு அர்பணிக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “எங்கள் பாஜக அரசு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வீடு இல்லாத ஏழை, எளியோருக்கு, 2022 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் வீட்டு வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும். இதுவரை நரேந்திர மோடி அரசு உஜ்வாலா திட்டத்தின் கீழ் 13 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்கியுள்ளது. நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கியுள்ளது, இப்போது நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நீர் இணைப்பை வழங்குவதற்காக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். 2022 ஆம் ஆண்டு நீர் இணைப்பு இல்லாத ஒரு வீடு கூட நாட்டில் இருக்காது” எனக் கூறினார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.