திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.
வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நிபந்தனை இன்றி உடனே திரும்பப் பெற வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை மேலும் தாமதமின்றிக் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொருளாளர் துரைமுருகன், டிஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.