பொது சுகாதாரத்துறை உத்தரவு
மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சையில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.