கர்நாடகா கோலார் மாவட்டத்தில் வாங்கிய கடனை
கர்நாடகா கோலார் மாவட்டத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 3 மாத குழந்தையை விற்ற தந்தை
கர்நாடகா கோலார் மாவட்டத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தான் பெற்ற 3 மாத குழந்தையை தந்தையே விற்ற அவலம் அரங்கேறியுள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான குழந்தையின் தந்தை முனிராஜ், தொழில் செய்வதாக கூறி பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ரூ.40 ஆயிரம் கடனை கட்ட முடியாமல் திணறிய முனிராஜ் தனது குழந்தையை பக்கத்து வீட்டு பெண்ணுடன் சேர்ந்து விற்பனை செய்துள்ளார். குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதி முறைப்படி பதிவு செய்து தத்தெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தனது நண்பர் சில ஆண்டுகள் குழந்தையை வளர்ப்பதாக மனைவியிடம் கூறி குழந்தையை முனிராஜ் விற்றுள்ளார். குழந்தையை பார்க்க வேண்டுமென மனைவி கூறிய போது உண்மையை முனிராஜ் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த முனிராஜின் மனைவி போலீசாருக்கும், மகளிர் நல ஆணைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். தத்தெடுத்த பெற்றோரிடம் இருந்து குழந்தையை மீட்டு, முனிராஜை போலீசார் கைது செய்தனர்.