கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு
ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.ராமேஸ்வரம் தீவில் மழைக்காலங்களில் கடல் நீர்மட்டம் உயர்வதால் தனுஷ்கோடி பாக்ஜலசந்தி கடற்கரை பகுதியில், பல ஆற்றுவாய் வழியாக கடற்கரையை தாண்டி நிலப்பரப்பில் கடல்நீர் தேங்கி கடற்பரப்பை போன்று காட்சியளிக்கும்.