கடலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் கைது
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் சர்குருநாதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெறும் பணிகளுக்கு 2% சதவீத கமிஷனாக 30,000 ரூபாய் பேசி 15 ஆயிரம் ரூபாய் பெற்றபோது கைது செய்தனர். கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.