குடிநீர் மற்றும் தடையின்றி மின்சாரம்

குடிநீர் மற்றும் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

குடிநீர் மற்றும் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து துறைச் செயலாளர்களுடன் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் நீர்நிலைகள் வறண்டு வருகிறது. அதன் காரணமாக, தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் முதல் மனிதர்கள்வரை தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் கோடை வெப்பத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் கோடை வெப்பத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.