4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு
4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. ஆந்திரா, தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திரா 25, தெலுங்கானா 17, மராட்டியம் 11, ம.பி. 8, பீகார் 5, ஒடிசாவில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தரப் பிரதேசம் 13, மேற்குவங்கம் 8, ஜார்க்கண்ட் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4-ம் கட்ட தேர்தலில் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்