சரும நோய்களை சரி செய்யும் பூவரசன்
எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் அந்த நோயை நாமாக வெளியில் கூறினால்தான் மற்றவர்களுக்கு தெரியவரும். ஆனால் சருமத்தில் ஏற்படக்கூடிய நோய்களை நாம் சொல்லாமலேயே மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். அப்படி தெரிந்தவர்கள் நம்மை விட்டு ஒரு அடி விலகியே நடப்பார்கள். காரணம் சரும நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என்பதால் தான். ஒருவருக்கு சரும நோய்கள் வந்துவிட்டால் அவருடைய வீட்டிலேயே அவருடைய பொருட்களை யாரும் தொட மாட்டார்கள். அவரை ஒதுக்கி வைப்பது போலவே நடந்துவார்கள். குறிப்பாக தலையில் பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் உபயோகப்படுத்தும் சீப்பையோ துண்டையோ நாம் உபயோகப்படுத்தும் பொழுது நமக்கும் வந்துவிடும். அதேபோல் தேமல் இருப்பவர்கள் உபயோகப்படுத்தக்கூடிய உடைகளை நாம் உபயோகப்படுத்தினோம் என்றால் நமக்கும் தேம்பல் வந்துவிடும்.
இப்படி சரும நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் சரும நோய்கள் ஏற்பட்டவர்களை நாம் ஒரு அடி தள்ளியே வைத்திருப்போம். அப்படிப்பட்டவர்களுடைய சரும நோய்களை முழுமையாக நீக்குவதற்கு உதவக் கூடியதாக திகழ்வதுதான் பூவரசன் மரம். இந்த பூவரசன் மரத்தை வைத்து எப்படி நம்முடைய சரும நோய்களை நீக்கலாம் என்றுதான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருக்கு சரும நோய்கள் வந்துவிட்டால் அது முழுமையாக நீங்கிவிடும் என்று கூற முடியாது. சிறிது அலட்சியம் படுத்தினால் கூட மறுபடியும் திரும்ப வந்து பிரச்சனைகளை உண்டாக்கும். இதோடு மட்டுமல்லாமல் சரும நோய் வந்தவர்கள் முறையாக அவர்களுடைய சருமத்தை பராமரித்துக்கொண்டே இருக்க வேண்டும். முதலில் சரும நோய்கள் வராமல் பார்த்துக் கொள்வதுதான் நல்லது. அதையும் மீறி சரும நோய்கள் வந்துவிட்டது என்றால் அதை சரி செய்வதற்குரிய அருமருந்தாக திகழ்வதுதான் பூவரசன் மரம்.
இந்த பூவரசம் மரத்தில் இருக்க கிடைக்கக்கூடிய காயை நாம் மஞ்சள் உரசுவது போல் உரசினாலோ அல்லது இடித்து அறைத்தாலோ அதிலிருந்து மஞ்சள் நிறத்திலான ஒரு திரவம் வெளிப்படும். இந்த திரவத்தை தேமல் இருக்கும் இடத்தில் நாம் தினமும் தடவி வர தேமல் முற்றிலும் நீங்கும். சொரி சிரங்கு, கருந்தேம்பல், படர்தாமரை என்று எப்பேர்பட்ட சரும நோய்களாக இருந்தாலும் அந்த சரும நோய்களை நீக்குவதற்கு இந்த மஞ்சள் திரவம் ஒன்று போதும். தினமும் தொடர்ச்சியாக இதை தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு சாதாரணமாக நாம் முகத்தை கழுவிக் கொள்ளலாம். இதோடு மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு செயின் போட்டு கழுத்தில் கருமை ஏற்பட்டிருக்கும். அந்த கழுத்து கருமையை நீக்குவதற்கும் இந்த மஞ்சள் நிற திரவம் உதவிகிறது. இதை நாம் தொடர்ச்சியாக தடவுவதன் மூலம் அந்த கருமை நீங்கி நம்முடைய இயற்கையான சரும நிறம் வெளிப்படும்.