ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு
கடந்த மே இரண்டாம் தேதி காணாமல் போனதாக சொல்லப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் நான்காம் தேதி எரிந்த நிலையில் உடலானது மீட்கப்பட்டது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு காலையில் வாக்கிங் செல்லும்போது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை திருச்சி போலீசார் விசாரித்து வந்த நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ராமஜெயம் கொல்லப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அதிமுக ஆட்சி என்பதால் இவ்வழக்கில் பெரிதாக அரசு அக்கறை காட்டவில்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கும் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக இந்த வழக்கை தற்போது துரிதப்படுத்தி வருகிறது. கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் சிலரை சிபிசிஐடி போலீசார் சரித்து வருகின்றனர்.