திருப்பதி ஏழுமலையான் கோயிலில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண சேவைகளுக்கான (ஆர்ஜித சேவை) ஆகஸ்ட் மாத டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு வரும் 18ம்தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் வெளியிடுகிறது. இந்த சேவை டிக்கெட்டுகளில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்டவற்றுக்கு 18ம்தேதி காலை 10 மணி முதல் தொடங்கி மே 20ம்தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம். குலுக்கலில் தேர்தெடுக்கப்டுபவர்கள் வரும் 20ம்தேதி முதல் 22ம் மதியம் 12 மணி வரை முன் பணம் செலுத்தியவர்களுக்கு குலுக்கலில் தேர்தெடுக்கப்பட்ட டிக்கெட் வழங்கப்படும்.