முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லியில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்
ஜாமீனில் விடுதலையான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று தொடங்க உள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா அமர்வு கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கும் அனுமதி வழங்கி உள்ளது. இதன் எதிரொலியாக நேற்று இரவு திகார் சிறையில் முதல்வர் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.