வலிப்பு நோய்க்கு என்ன மருந்து
வலிப்பு நோய்க்கு தரப்படும் மருந்துகள் பற்றியும் கால்-கை வலிப்பு நோய் பற்றிய முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் தந்துள்ளேன் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்
வலிப்பு நோய் என்பது மூளையின் மின்னலையின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றத்தினால் வருவது. இது நரம்பியல் கோளாறு ,தொற்றுநோய் அல்ல. மன நோயும் அல்ல. இது மன நல பாதிப்பும் அல்ல
வலிப்பு நோய் வருவதற்கான காரணங்கள்:
1.மரபணுக் காரணிகள்
,பெற்றோருக்கு இருக்கும்போது இதனால் வரக்கூடிய வலிப்பு ஏற்படும். 90 சதவீதத்திற்கு மேல் எதனால் வருகிறது ?என்று அறிய இயலாத காரணங்களால் தான் வலிப்பு நோய் ஏற்படுகிறது. இதுதவிர தலைக்காயம் ,மூளை க்காய்ச்சல்,மூளை சவ்வு அழற்சி ,மூளைக்கட்டி ,மூளை வாதம் அல்சீமர் நோய் போன்றவையும் வலிப்பைஏற்படுத்தலாம்
மக்கள் தொகையில் 10 பேரில் ஒருவருக்கு ஏதாவது ஒரு முறை வலிப்பு வந்து இருக்கலாம் .வலிப்பு நோய்க்கு குழந்தைகள் ,பெரியோர், ஆண் ,பெண், வேறுபட்ட இனங்கள் ,மதங்கள், சமூகப் பின்னணி எனப்பாகுபாடு கிடையாது.
வலிப்பு நோயை கண்டறிய நோயின் தன்மை, அறிகுறிகள் ,தன் வரலாறு ,நரம்பியல் பரிசோதனை, ரத்தம் மற்றும்
மூளை மின்னலை வரை படம், எம் ஆர் ஐ அல்லது சிடி ஸ்கேன் உபயோகமாக இருக்கும் .வலிப்பு ஏற்படும்போது கூட இருந்த ஒருவர் பார்த்தபின் முழு விளக்கம் எந்த வகையான வலிப்பு நோய் என்பதனை அறிவதற்கு உதவியாக இருக்கும்.
மூளை மின்னலை வரைபடம் பொதுவாக செய்யப்படும் முதல் பரிசோதனையாகும். இப்பரிசோதனையில் மூளையின் மின்னணு செயல்பாடு தொடர்ந்து பதிவு செய்யப்படும்..அதனை ஆராய்ந்து எந்த வகையான வலிப்பு நோய் வந்துள்ளது ?என்பதனைக் கண்டறியலாம். ஒவ்வொரு வகையான வலிப்பு நோய்க்கும் குறிப்பிட்ட விதமான மாற்றத்தினை மின்னலை வரைபடத்தில் கண்டறிய இயலும்.
ஸ்கேன்
மூளையின் உள் அமைப்பு இயக்கம் மற்றும் பிறவிக் கோளாறுகளை கண்டறிய சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ மற்றும் பெட் ஸ்கேன் உதவும்.
வலிப்புக்கு என்ன மாதிரி சிகிச்சை தேவை?
பெரும்பாலான கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மருந்துகள் மூலம் வலிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.வலிப்பு நோயின் வகையைப்பொருத்து எந்த வகையான மருந்து தேவைப்படும் என்பதை உங்கள் மருத்துவர் தேர்வு செய்வார் .அந்த மருந்துக்கு ஏதாவது எதிர்வினை ஏற்பட்டாலும் சரியான கட்டுப்பாடு வரவில்லை என்றாலும் அதை நிறுத்த வேண்டும் .அதற்கு பதிலாக மாற்று மருந்து தரப்படும் .வெகு அரிதாகவே சில குழந்தைகளுக்கு மருந்துகள் மூலம் குணம் தெரியாது. இச்சூழ்நிலையில் சிறப்பு கீடோஉணவு மூலம் வலிப்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
மருத்துவர் உங்கள் குழந்தைக்கு மருந்தினை தந்த பிறகு தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் .மருந்துக்கு பலன் இருக்கிறதா? குழந்தையின் வலிப்பு கட்டுப்பாட்டில் உள்ளதா ?என்பதனை அறிய தொடர் மருத்துவ பரிசோதனை தேவைப்படும்.
வலிப்பு நோய் மருந்துகள் உண்பதால் குழந்தைக்கு தூக்கம் அதிகமாக வரலாம். பசி ஆகலாம் .பசி குறையலாம் தலை சுற்றலாம் . காய்ச்சல் அல்லது மயக்கம் ஏற்படலாம் இந்த நிலைகளில் உடனடியாக மருத்துவரை அணுகவும் .எக்காரணத்தைக் கொண்டும் நீங்களாகவே மருந்துகளை நிறுத்தக் கூடாது .மருந்து தீர்ந்து விட்டாலும் அல்லது திடீரென்று நீங்கள் நிறுத்தி விட்டாலும் தொடர் வலிப்பு ஏற்படும். அது சில நேரங்களில் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் .
சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் வலிப்பு நின்றுவிடும் அதற்குள் நிற்கவில்லை என்றால் மருத்துவர் கொடுத்த மூக்கு ஸ்ப்ரே மிடஸோலம் மருந்தினை குழந்தைக்கு அடிக்கவேண்டும்.தொடர்ந்த வலிப்பு,,அடிக்கடி வலிப்பு, ஏற்பட்ட வலிப்பு நிற்காவிட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
வலிப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும்?
வலிப்பு வந்தவரை முதலில் பாதுகாப்பாக படுக்க வைக்க வேண்டும். தரையில் படுத்து இருப்பின் மென்மையான தலையணையை தலைக்கு கீழே வைக்கவும் .ஒரு பக்கமாக திருப்பி படுக்க வைக்க வும்.வாந்தி எடுத்தால் முகத்தை தரையை நோக்கி தி ருப்பி வைக்கவும். அருகிலுள்ள மரச்சாமான்களை அகற்றவும்.
எவ்வளவு நேரம் இருந்தது என்பதை குறித்துக் கொள்ளவும்.அவர் வாயில் எதையும் திணிக்க கூடாது. உங்கள் விரல்களை வைக்கக்கூடாது .கட்டை மரச்சாமான் எதுவும் கூடாது முழுமையாக விழிக்கும் வரை சாப்பிடவோ அருந்தவோ எதையும் தரக்கூடாது.வலிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது அணைத்துக்கொண்டு உலுக்கி எழுப்பி சத்தம் போட்டு கூப்பிடக்கூடாது .அமைதியாக இருந்து உதவி செய்யவும். எவ்வளவு முறை வந்தது என்பதனை குறி த்துக் கொள்ளவும்.
என்ன செய்யக்கூடாது?
அவரை அமுக்கி பிடித்து வலிப்பினைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது கூடாது ..உங்களுக்கும் அவருக்கும் அதனால் காயம் ஏற்படலாம் .உணவு அல்லது திரவ உணவுகளை தருவது கூடாது நுரையீரலுக்குள் புரையேறி மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். வாயினுள் எதையும் வைக்கக்கூடாது.கையில் சாவி இரும்புச்சாமன் தரக்கூடாது.
வலிப்பு ஏற்பட்ட பின் என்ன செய்ய வேண்டும்?
அருகில் உள்ள பொருட்களை அகற்றவும். அவருடைய கண் கண்ணாடி, கழுத்துப்பட்டை தலைத் துணி ஆகியவற்றை நெகிழ்த்த வும்.கூர்மையான ,கடினமான பொருட்கள் இருந்தால் அவற்றையும் கழுத்து மற்றும் இடுப்பில் இறுக்கமாக அணிந்துள்ள ஆடைகளையும் தளர்த்தவும். ஒரு புறமாக திரும்பி படுக்க வைப்பது .உமிழ் நீர் வடியவும் சுவாசம் தடைப்படாமலும் செய்துஅவர்களுக்கு உதவும். வலிப் பு ஏற்பட்ட பின்னர் தூக்கம் வரும் எனவே தானே விழிப்புணர்வு பெறும் வரை நோயாளியை ஒரு பாதுகாப்பான இடத்தில் ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும் .அதுவரைபார்த்து க் கொள்ளவும்.