வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும்: பிரதீப் ஜான்
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 13ம் தேதி முதல் 22ம் தேதிக்குள் மேலடுக்கு சுழற்சி உருவான பிறகு தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு. மே மாத இறுதியில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயல் சின்னமாக உருவாக வாய்ப்புள்ளது. ஜூன் 2-வது வாரத்தில் தென் மேற்கு பருவக் காற்று உருவாகும். தென்மேற்கு பருவ காலத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம என்றும் தெரிவித்தார்.