உ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம்

உ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம் சந்தோலியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். நில உரிமையாளரின் மகன், 3 தூய்மை பணியாளர்கள் உட்பட 4 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 15 ஆண்டுகள் பழமையான கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 4 பேரும் பலியாகினர். உ.பி.யில் மே 3ம் தேதி விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.