ஒகேனக்கல் பரிசல் சவாரி மீண்டும் தொடக்கம்
ஒகேனக்கல்லில் பராமரிப்பு பணி காரணமாக 2 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசல் சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் இன்று மீண்டும் பரிசல் சவாரி தொடங்கியது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசல் சவாரி செய்து வருகின்றனர்.