மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கரை கைது செய்ததற்கான ஆவணங்களை கோவை சிறை அதிகாரிகளிடம் சென்னை போலீசார் வழங்கியுள்ளனர் . பெண் பத்திரிகையாளர் உள்ளிட்ட இருவர் அளித்த புகாரில் சவுக்கு சங்கர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.