அரியலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி
அரியலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஹோமத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபரீத சம்பவம் நடந்தது.அரியலூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்று நேற்று மாலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக அரியலூரில் இருந்து சென்ற கார் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.