ஹரியானா பாஜக முதல்வர் விலக துஷ்யந்த் வலியுறுத்தல்
ஹரியானாவில் நயாப் சைனி தலைமையில் பாஜக ஆட்சி பதவி விலக வேண்டும் என ஆதரவை விலக்கிக்கொண்ட துஷ்யந்த் வலியுறுத்தி உள்ளார். ஹரியானாவில் 10 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஜனநாயக ஜனதா கட்சி இதுவரை பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்தது. பாஜக அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அண்மையில் அறிவித்தார்.