ஏர் இந்தியா விமானத்தில் சிங்கப்பூர் செல்ல
ஏர் இந்தியா விமானத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டிய 183 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் தவிப்பு
ஏர் இந்தியா விமானத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டிய 183 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். ஏர் இந்தியா நிர்வாக ஊழியர்களிடம் பயணிகள் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏர் இந்தியாவின் 80 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.