தீவிரமாகும் விசாரணை
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பிவைப்பு; தீவிரமாகும் விசாரணை
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மே 4ம் தேதி ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் தோட்டத்தில் கண்டெடுத்தது தொடர்பாக டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது. டிஎன்ஏ அறிக்கை வந்தவுடன் மகன் மற்றும் மனைவியின் டிஎன்ஏக்களை ஒப்பிட்டு உறுதி செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் மாயமானதாக அவரது மகன் ஜெஃப்ரின் புகார் அளித்திருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.