அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை
ஊசி மருந்து செலுத்தி தனது 17 நோயாளிகளைக் கொன்ற குற்றத்துக்காக அமெரிக்காவைச் சோ்ந்த செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த நாட்டின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சோ்ந்த ஹெதா் பிரஸ்டீ என்ற 41 வயது செவிலி, 2020-ஆம் ஆண்டிலிருந்து 2023-ஆம் ஆண்டு வரை 22 நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்தை அதிக அளவில் செலுத்தியதாகவும் அவா்களில் 17 போ் மரணமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவரால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 43 முதல் 104 வயது வரையிலானவா்கள். தனது நோயாளிகள் மீதான வெறுப்பை பெற்றோா்களிடமும் சக நண்பா்களிடமும் ஹெதா் நீண்ட காலமாகவே வெளிப்படுத்திவந்ததாகக் கூறப்படுகிறது. நோயாளிகள் வாழ விரும்பினாலும், அவா்கள் இனி வாழத் தகுதியில்லாதவா்கள் என்று அவரே முடிவு செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹெதருக்கு 760 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.