பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம்
பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 24 பேர் கைது
பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 24 பேரை கைது செய்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 14 பேரை தேர்வு அறையிலேயே பீகார் போலீஸ் கைது செய்தது. பாட்னாவில் சில விடுதிகளில் தேர்வுக்கு முந்தைய நாளே, வினாத்தாள் தொடர்பாக அவர்களை படிக்க வைப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒவ்வொரு தேர்வர்களிடம் இருந்து தலா ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். பீகார் போலீசார் பல்வேறு விடுதிகளில் சோதனை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்