மே 10ம் தேதி திருச்சி – பாலக்காடு
மே 10ம் தேதி திருச்சி – பாலக்காடு ரயில், திருப்பூர் வரை மட்டுமே செல்லும்.
வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக மே 10ம் தேதி திருச்சி – பாலக்காடு ரயில், பகுதி தூரம் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பகல் 1 மணிக்கு புறப்படும் 16843 பாலக்காடு டவுன் விரைவு ரயில், மே 10ம் தேதி திருப்பூர் – பாலக்காடு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி – திருப்பூர் இடையே மட்டுமே இயங்கும்.
- செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
- https://chat.whatsapp.com/LqOwRlX31M285tbICra1oj