ரேவண்ணா முன்ஜாமின் மனு பிற்பகல் ஒத்திவைப்பு..!!
தேவகவுடா மகன் ரேவண்ணாவின் முன்ஜாமின் மனுவை பிற்பகல் 2.45 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. மைசூரு கேஆர் நகர் போலீசில் பெண் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ரேவண்ணா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ரேவண்ணாவின் ஆதரவாளர் சதீஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.