ஆண்ட்ராய்டு மொபைல் பரிசு எனக்கூறி
ஆண்ட்ராய்டு மொபைல் பரிசு எனக்கூறி ஆன்லைனில் விவசாயியை ஏமாற்றிய பெண் கொரியரில் ஸ்பீக்கர் பாக்ஸ் அனுப்பி மோசடி ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது
உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. ஆண்ட்ராய்டு மொபைல் பரிசு என கூறி ஆன்லைனில் விவசாயியை ஏமாற்றி, கொரியரில் ஸ்பீக்கர் பாக்ஸ் அனுப்பி பெண் மோசடி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி கண்ணையன்(40). இவரது செல்போனில் நேற்று ஒரு பெண் ஒருவர் பேசியுள்ளார். அதில் அவர் பெங்களூர் பகுதியில் இருந்து தாங்கள் பேசுவதாகவும், நீங்கள் என்ன மொபைல் வைத்திருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு கண்ணையன் நான் கூலி தொழிலாளி, தான் வைத்து இருப்பது சாதாரண பட்டன் செல்போன் என்றார்.
அதற்கு அந்த பெண் ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது’ என்று கூறி ₹25 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு மொபைல் பரிசு விழுந்திருக்கிறது. அதற்கு முன் தொகையாக ₹1500 மட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு கண்ணையன் தன்னிடம் பணம் இல்லை. எனக்கு வேண்டாம் என அவர் மறுத்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து ₹25.000 மதிப்புள்ள செல்போனை தருகிறோம். நம்பிக்கை இல்லை என்றால் அருகில் வேறு யாராவது ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருந்தால், அவர்களுக்கு உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் வீடியோ அனுப்பி வைப்பதாக கூறினார்.