ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்
மலேசியாவில் இருந்து ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் திருச்சி ஏர்போட்டில் சிக்கியது. இது தொடர்பாக பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர்ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு போலீசார் சோதனை செய்தனர்.