சிறுநீரகம் காப்போம்… சிறப்பாய் வாழ்வோம்
நிரந்தர சிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு
சிறுநீரகப் பாதையில் அடைப்பு ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் சரி செய்யப்பட்டுவிட்டால் சிறுநீரகங்கள் மீண்டும் பழையபடி முற்றிலும் சரியாகிவிடுகின்றன. ஆனால் நீண்ட காலம் (வாரங்கள், மாதங்கள்) அடைப்பை சரி செய்யாமல் விட்டுவிட்டால் அதன் பிறகு அடைப்பை நீக்கினாலும் சிறுநீரகங்கள் நிரந்தமாக செயலிழந்து விடக்கூடும்.
தொந்தரவுகள்
சிறுநீரகப்பைக்கு கீழே எந்த காரணத்தினால் அடைப்பு ஏற்பட்டாலும் சிறுநீர் கழிப்பதில் கஷ்டங்கள் உண்டாகலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கையில் வலி, முக்கி முக்கி சிறுநீர் கழித்தல், அடிவயிற்றில் வலி ஆகியன இவற்றில் சில. சிறுநீர்ப்பையின் பாதை முற்றிலும் அடைப்பட்டுவிட்டால் கொஞ்சம் கூட சிறுநீர் வராமல் போகலாம். சிறுநீர்ப்பைக்கு மேலே உள் சிறுநீர்க் குழாய்களில் வரும் அடைப்புகளால் சில சமயங்களில் எந்த வித தொந்தரவும் வெளியே தெரியாமலும் இருக்கலாம் ஆனால் பெரும்பாலான சமயங்களில் உள் சிறுநீர்க் குழாய்களின் அடைப்பிற்கு காரணம் சிறுநீரக கற்கள்தான். இவற்றால் முதுகு, வயிற்றில் அதீத வலி, சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் ரத்தம் ஆகிய தொந்தரவுகள் வரும்.சிறுநீரகப் பாதை அடைப்பின் காரணங்கள் சிறுநீரகக் கற்கள்இவை சிறுநீரகப் பாதையின் எந்த பாகத்தையும் அடைக்கலாம். பெரும்பாலும் வலியோடு வரும்.
ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் (Benign Hypertrophy of Prostate-BPH)
ஆண்களுக்கு வயதாகும் போது சிலருக்கு சிறுநீர்ப்பையின் அடியில் உள்ள இந்த ப்ராஸ்டேட் சுரப்பி வீங்கி சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறுவதை தடை செய்யும். சில சமயம் கொஞ்சம் கூட சிறுநீர் வராமல் அடைத்துக் கொள்ளலாம். அபூர்வமாக ப்ராஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் அடைப்பிற்கு காரணமாக இருக்கலாம்.
சிறுநீர்ப்பையில் பாதிப்புகள்
சில சமயம் சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தும் நரம்புகளில் கோளாறுகள் இருந்தால் (உதாரணம் சர்க்கரை நோய், நரம்பு பாதிப்பு, தண்டுவட பாதிப்புகள்) சிறுநீர்ப்பையின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு அடைப்பு ஏற்படலாம். இதற்கு சில சமயம் நிரந்தரமாக வெளி சிறுநீர்க்குழாயில் ஒரு பிளாஸ்டிக் குழாய் (காதிட்டர் – Catheter) பொருத்தப்பட வேண்டி வரலாம்.
பிறவிக் கோளாறுகள்
சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகப் பாதையின் அமைப்புகளில் கோளாறுடன் பிறந்து இருக்கலாம். அதிகமாக ஆண் குழந்தைகளுக்கு வெளிசிறுநீர்க் குழாயில் வால்வுகளால் (Urethral valve) அடைப்பு உண்டாகலாம். இவைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் அறுவை சிகிச்சையில் குணப்படுத்தலாம்.உள் சிறுநீர்க் குழாயும் சிறுநீரகமும் சேரும் இடத்தில் அடைப்பு (PUJ Obstruction – பி-யூ.ஜெ பகுதியில் அடைப்பு)உள்சிறுநீர்க் குழாயின் மேற்பகுதியில் (சிறுநீரகத்துடன் சேரும் பகுதியில்) பிறவியிலேயே அமைப்புக் கோளாறு காரணமாக பலருக்கு அடைப்பு ஏற்படுகின்றது.