தனியார் பள்ளிகளின் 315 வாகனங்கள் ஆய்வு

கிருஷ்ணகிரியில் முதற்கட்டமாக 52 தனியார் பள்ளிகளின் 315 வாகனங்கள் ஆய்வு

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை, கலெக்டர் சரயு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முதல்கட்டமாக 52 பள்ளிகளின் 315 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக, தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை, மாவட்ட கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கலெக்டர் சரயு கூறியதாவது: கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய நான்கு வட்டாரங்களில், 89 தனியார் பள்ளிகளை சேர்ந்த 490 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இதில் கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் ஆகிய இரண்டு வட்டாரங்களை சேர்ந்த 52 தனியார் பள்ளிகளின் 315 பள்ளி பஸ்கள், முதல்கட்டமாக பள்ளி வாகனங்கள் சிறப்பு விதிகள் 2012ன் படி 22 அம்சங்களுடன் இயக்கப்படுகின்றனவா என, பள்ளி ஆய்வு கமிட்டிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வில், பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர வழி, வேக கட்டுப்பாடு மற்றும் வாகன ஆவணங்கள் முறையாக பராமரிப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவசர காலங்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில், மாணவர்கள் உடனடியாக தொடர்புகொள்ள, அவசர கால பொத்தான், பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.