மனைவியை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு அனுமதி
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வாரம் ஒருமுறை தமது மனைவியை சந்திக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தமது மனைவியை சந்திக்க அனுமதி கோரி சிசோடியா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.