இந்து முன்னணி பிரமுகர் கைது
கோவையில் இளைஞர் படம் எடுத்ததாக கூறி அவரது செல்போனை பறித்து மிரட்டிய இந்து முன்னணி பிரமுகர் கைது
கோவை செல்வபுரத்தில் இளைஞர் படம் எடுத்ததாக கூறி அவரது செல்போனை பறித்து மிரட்டிய இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டார். செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது படம் ஏதும் இல்லாததால் இந்து முன்னணி பிரமுகர் சூர்ய பிரசாத் கைது செய்யப்பட்டார். தனி பாதுகாவலர் வேண்டும் என்பதற்காக இளைஞர் அசாருதீனை மிரட்டி செல்போனை பறித்து பொய் புகார் அளித்தது அம்பலமாகியுள்ளது. அசாருதீன் அளித்த புகாரை அடுத்து இந்து முன்னணி பிரமுகர் சூர்ய பிரசாத்தை செல்வபுரம் போலீஸ் கைது செய்தது.