பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும்

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியவின் அனைத்து மாவட்டங்களிலும் பல கோடி செலவில் பாரதிய ஜனதா கட்சிக்கு அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. மாநில தலைநகரங்களில் ரூ.100 கோடி மதிப்புள்ள அலுவலகங்களை பாரதிய ஜனதா கட்சி கட்டியுள்ளது. மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வழக்கமான செலவுகளை தவிர பல மாநிலங்களில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக பல கோடி ரூபாய் செலவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.87,750 கோடியை பாரதிய ஜனதா கட்சி எப்படி திரட்டியது என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி 2014-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ரூ.2,661 கோடி செலவில் அக்கட்சிக்கு மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்த மே 2014 ஆகஸ்ட்டில் பேசிய பிரதமர் மோடி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சிக்கு அலுவலகங்கள் கட்டப்படும் என்றார். உடனடியாக 635 மாவட்டங்களில் பாஜகவுக்கு அலுவலகங்கள் கட்டுவது என்று 2015-ல் கட்சி தலைமை முடிவு செய்தது. 2023 மார்ச்சில் நாடு முழுவதும் 887 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களை கட்டுவது என முடிவு செய்யபட்டது.

பாரதிய ஜனதா கட்சிக்கு பெரிதாக செல்வாக்கு இல்லாத கிருஷ்ணகிரியில் கூட 5 மாடி கொண்ட அலுவலகம் அட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.