உச்சநீதிமன்றம் கருத்து
முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடியது:
காப்பீடு திட்டங்களில் அந்தந்த மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்புகளுக்கு உட்பட்டு ஸ்டாம்ப் டூட்டி வசூலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு ஸ்டாம்ப் டூட்டியாக ரூ.1.9 கோடி வசூலித்ததற்கு எதிராக எல்.ஐ.சி. நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நரசிம்ம அமர்வு உத்தரவுகளை பிறப்பித்தது. முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடிய ஒன்றுதான் என்ற உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மாநில அரசுகள் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்டு முத்திரை தாள் வரி வசூலிக்கலாம் என்றார். காப்பீடுகள் எந்த இடத்தில் வழங்கப்பட்டுள்ளன என்பதை கணக்கில் எடுத்து கொண்டு பாலிசிகளுக்கு வரி விதிக்கவும், வசூலிக்கவும் மாநிலத்தின் அதிகாரம் தீர்மானிக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஒன்றிய அரசுக்கு இருப்பது போல பட்டியல் 3-44ம் கீழ் ஸ்டாம்ப் டூட்டிகளை நிர்ணயிப்பது மற்றும் வசூலிக்கும் மாநில அரசுக்கான அதிகாரத்தை யாரும் மறுக்க முடியாது என்ற உத்தரவை தெளிவுப்படுத்தி உள்ளது.