காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி

நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு அந்நாடு மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்தது. விலைவாசி வரலாறு காணாத அளவில் உயர்ந்ததால் தினமும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழக அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் அனுப்பி வைத்தார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் நடந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மே தின கூட்டத்தில் செந்தில் தொண்டமான் பேசினார்.

அப்போது பேசிய அவர், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்த நேரத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 40 லட்சம் குடும்பங்களுக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 100 மெட்ரிக் டன் மருந்து, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.