பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம்
கர்நாடக பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம்!
பிரஜ்வல் மட்டுமன்றி அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணாவும் விசாரணைக்கு ஆஜராக சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி இருந்தது. இருவருமே விசாரணைக்கு ஆஜராகாததால் அவகாசம் கேட்ட பிரஜ்வல் கோரிக்கையை நிராகரித்தது சிறப்பு புலனாய்வு குழு. ஆபாச வீடியோக்கள் வெளியானவுடன் ஜெர்மனி தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம். முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், பாஜக கூட்டணியான ம.ஜ.த. எம்.பி.யுமான பிரஜ்வல் 300 பெண்களை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.