Virtual – ஆக கைது செய்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி பற்றிய செய்தி குறிப்பு.

Virtual – ஆக கைது செய்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி பற்றிய செய்தி குறிப்பு.

சைபர் மோசடி செய்பவர்கள் ஒரு அதிநவீன மற்றும் சூழ்ச்சித்தந்திரத்தை உள்ளடக்கிய ஒரு புதிய மோசடியை தற்போது கையாளுகிறார்கள், மோசடி செய்பவர் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளை போல ஆள் மாறாட்டம் செய்கிறார், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர், பண மோசடி அல்லது சைபர் கிரைம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்.

மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவரை சிறைவாசம் மற்றும் அவமானம் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பீதியையும் பயத்தையும் ஏற்படுத்துகிறார்.

மேலும் பின்விளைவுகளை தடுக்க பாதிக்கப்பட்டவரிடம் இருந்து உடனடியாக பணம் கோருகிறார். பயத்தில் பாதிக்கப்பட்டவர் மோசடி செய்பவருக்கு பணம் செலுத்தி ஏமாறுகிறார்.

மேலும் நீங்கள் இது போன்ற மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தை புகார் அளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகாரைப்பதிவு செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published.