ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு – காவல்துறை விளக்கம்:
தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம்.
வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.
ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் அரசு வழங்கும் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம்.
வேறொருவர் பெயரில் உள்ள வாகனத்தில் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தினால் அபராதம்.
முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, 2ஆவது தடவை என்றால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும்-சென்னை காவல்துறை.
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.