மே தினத்தை முன்னிட்டு மதுபான விற்பனைக்கூடங்கள் மூடப்படும்.
திருச்சி மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு அனைத்து சில்லரை மதுபான விற்பனைக்கூடங்கள் (டாஸ்மாக் கடைகள்) மற்றும் அவற்றுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள் ஒரு நாள் மூடப்படுவதாக கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாவட்டத்திலுள்ள மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், FL2 முதல் FL 11 பார்கள் (FL-6 நீங்கலாக) அனைத்து கடைகளும் மே தினத்தை முன்னிட்டு நாளை (மே 1) காலை முதல் இரவு 12 மணி வரை மூடப்படும்.
அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வது, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது ஆகியன தவிர்க்கப்பட வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.