7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் – நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சத்தீஷ்காரின் நாராயன்பூர் மற்றும் கன்கர் மாவட்டங்களின் எல்லையையொட்டி வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த வனப்பகுதியில் இன்று காலை மாநில சிறப்பு தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து போலீசாரும் பதிலடி துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் நாராயன்பூர், கண்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.