விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விவசாயி டிராக்டரை தீ வைத்து எரித்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் மீது எம்எல்ஏ மதுசூதன் குற்றம்சாட்டினார்.திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி மண்டல்ம் ஊரந்தூர் கிராமத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் விவசாயி திலீப். இவரது டிராக்டர் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்த டிராக்டரை பார்வையிட்டு உரிமையாளர் திலீப்புக்கு ஆறுதல் கூறினார்.