பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வெயிலால் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும்.

அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடன் செயல்பட, அதிகாரிகள், அலுவலர்களை அறிவுறுத்தியிருக்கிறேன்.

பேரிடர் மேலாண்மை ஆணையம், அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வசதிக்காக சாலையோரங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன

வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி, துண்டு, தொப்பி அணிந்துகொள்ள வேண்டும்.

பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும்.

தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர். எஸ். பருக வேண்டும்.

மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும்.

மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்னை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்கு செல்லவேண்டும்

அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றைப் பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்; பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

வயது  முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது  களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.