மின்வாரிய அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை

லஞ்சம் வாங்கிய தேவிபட்டினம் மின்வாரிய அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது பிலால் என்பவர் வீட்டின் மேல் செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். மின் கம்பியை மாற்றி அமைக்க தேவிபட்டினம் மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ரூ.9,000 லஞ்சம் கேட்டுள்ளனர். முகமது பிலால் புகாரை அடுத்து அதிகாரிகள் லஞ்சம் பெறும் போது லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கையும் களவுமாக சிக்கினர். மின்வாரிய வணிக ஆய்வாளர் சுரேஷ் பாபு, உதவி மின் பொறியாளர் செல்வி, வயர்மேன் கந்தசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.