கொரடாச்சேரியில் தாய் திட்டியதால் மண்ணெண்ணெய் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
கொரடாச்சேரியில் தாய் திட்டியதால் மண்ணெண்ணெய் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். கொரடாச்சேரி திருவிடைவாசல் பர்மா காலனியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ரதன்யா (18). இவர் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாய் திட்டி செல்போனை பிடிங்கியுள்ளார்.
இதனால் கோபத்தில் இருந்தவர் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை குடித்து விட்டார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரதன்யாவை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரதன்யா நேற்று முன் தினம் இறந்தார். இது தொடர்பாக இறந்தவரின் தந்தை ரவிச்சந்திரன் கொரடாச்சேரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.