பெற்றோர் அருகே குழந்தைக்கும் இருக்கை வசதி கட்டாயம்.
விமானப் பயணத்தின் போது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அருகிலேயே இடம் ஒதுக்க வேண்டுமென விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுடன் அமர முடியாமல் போனது குறித்து பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, விமானப் பயணத்தின் போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடனிருப்பதை உறுதி செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.