திருமண விருந்து- 70 பேர் மருத்துவமனையில் அனுமதி
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.