சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயனம்
சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயனம் மற்றும் வேதி கற்களால் பழுக்க வைக்கப்பட்ட 4,000 கிலோ மாம்பழங்கள் மற்றும் 2,500 கிலோ வாழைப்பழங்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோயம்போடு பழ சந்தையில், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இதில், 70 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரசாயனம் பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 4,000 கிலோ மாம்பழங்கள் மற்றும் 2,500 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், 50 கடைகளுக்கு ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளன.