உச்சநீதிமன்றம் கண்டனம்

யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில் மன்னிப்பு விளம்பரம் வெளியிட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பொது மன்னிப்பு கோரும் விளம்பரத்தை பத்திரிகைகளில் சிறிய அளவில் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம். போலி விளம்பரங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலோபதி மருத்துவத்தின் தரத்தை சீர்குலைக்கும் வகையில் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்வதாக குற்றம்சாட்டி இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் பாலக்ரிஷ்ணா ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டது.

வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி போல்ஸ்லி பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போன்ற சிறிய அளவில் தான் வெளியிடுவீர்களா என கண்டனம் தெரிவித்தார். விளம்பரங்களின் நகலை பெரிதுபடுத்தி எடுத்துவரக்கூடாது என தெரிவித்த நீதிபதி போல்ஸ்லி பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பர பத்திரத்தை எடுத்துவரவேண்டும் அப்போது தான் சரியான அளவு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.