மலேசியாவில் கடற்படை 10 பேர் உயிரிழப்பு
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கோலாலம்பூரில் நடுவானில் பயிற்சி மேற்கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இரு ஹெலிகாப்டர்களில் பயணித்த கடற்படை ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மலேசிய கடற்படை தினத்தின் 90ம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது.