கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுரை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் இன்றைய தினம் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. வெளிநாடுகளில் இருந்து வரவழைத்த பூக்களால் மணமேடைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற உடன் ஏராளமான பெண்கள் புதுதாலி அணிந்து கொண்டனர். இதையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வந்தனர்.
புது தாலி மாற்றிய பெண்கள் இன்று காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருக்கும் மணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொண்டனர்.